எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்துள்ளது.
துப்பாக்கி சுடுதலில்...
துப்பாக்கி சுடுதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் மானு பாக்கர் ஏற்கெனவே பதக்க கணக்கை தொடங்கியிருந்தார். இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
மூன்றாவது இந்தியர்...
இதன்மூலம், ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியர், ஒலிம்பிக் தொடர்களில் இரண்டு பதக்கங்களை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை மானு பாக்கர் பெற்றுள்ளார். இந்தியாவின் சுஷில் குமார், பிவி சிந்து ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை முன்னதாக படைத்திருந்தனர். வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் 25 மீட்டர் பிஸ்டல் சுற்றில் கலந்து கொள்ளவுள்ள மானு தாக்கர், பதக்கத்தை வெல்லும் பட்சத்தில், மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


