முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமார் மனு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆத் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கடந்த மே 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள குமார், தனது கைது சட்டவிரோதமானது என்றும், முற்றிலும் மீறப்பட்ட செயலாகும் என்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தில்லி காவல்துறை இந்த மனுவை எதிர்த்தது. குமார் அவசரமாக கைது செய்யப்படவில்லை என்றும் அவர் சட்டத்தின்படியே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும் அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து, இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணை நடத்தப்பட்டதில், சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கோரி பிபவ் குமாரின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னதாக, அவரது ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து