முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியா கடற்கரையில் தற்கொலை படை தாக்குதல்: 32 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      உலகம்
Somalia 2024 08 04

Source: provided

மொகடிஷூ : சோமாலியா கடற்கரையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில்  32 பேர் பலியாகினர். 

சோமாலியாவில் மொகடிஷூ நகரின் அப்டியாஜிஸ் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற லிடோ கடற்கரை உள்ளது. ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் லிடோ கடற்கரையையொட்டி உணவு மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. 

இந்த கடற்கரையில் கடந்த 2-ம் தேதி இரவு ஏராளமானோர் குழுமியிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கடற்கரையில் கூடியிருந்த மக்களை நோக்கி தற்கொலை தாக்குதலை நடத்தினார். இதனால் பதற்றமடைந்த மக்கள் சிதறி ஓடினர். 

அப்போது அங்கு வந்த மேலும் 5 மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் 32 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அல்-கொய்தா அமைப்பின் பிரிவான அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து