முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண பொருள் வழங்கியது குறித்து டுவிட்டர் பக்கத்தில் சசிதரூர் பகிர்ந்த வீடியோவால் சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
Sasidharoor 2023-09-10

Source: provided

புதுடெல்லி : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் வீடியோவை  வலைதளத்தில் பகிர்ந்த சசி தரூர், மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை கொட்டியதால் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 361 பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் உதவி வழங்கச் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் சசி தரூர் பகிர்ந்துள்ளார்.

வயநாடு மக்களுக்கு உதவி செய்தது மறக்க முடியாத நாள். மறக்க முடியாத ஒன்று எப்போதும் நினைவில் இருக்கும். ஏனெனில் அது சிறப்பு அல்லது மறக்க முடியாதது என சசிதரூர் அந்த பதிவில் உருக்கமாக கூறியுள்ளார்.

மோசமான பாதிப்பு ஏற்பட்டு நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தை, மறக்க முடியாத நாள் என்று சசிதரூர் குறிப்பிட்டதற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து  வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து