முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பை கொல்ல சதி: ஈரான் உளவாளி கைது

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      உலகம்
Asif-Merchant 2024 08 07

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த ஈரான் உளவாளி ஆசிப் மெர்ச்சன்ட் (46) என்பவரை உளவுத்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. 

ஆசிப்மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாகவும், அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலரை அணுகியுள்ளார்.  ஆனால் அந்த நபர்கள் போலீஸ் அதிகாரிகள் ஆவார்கள். கூலிப்படை போல் நடித்த அதிகாரிகளிடம்  ஆசிப் மெர்ச்சன்ட் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார். 

ஆவணங்களை திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார். 

அதன்பின் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்ற போது ஆசிப் மெர்ச்சன்ட்டை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்  டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சில முக்கிய ஆதாரங்களின்படி டிரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து