முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவு: கூடுதல் நிதி ஒதுக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

புது டில்லி : வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா நேரில் சென்று பார்வையிட்டதுடன், சொந்தங்களை இழந்து தவித்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். 

வயநாடு நிலச்சரிவு குறித்து நேற்று பாராளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி பேசினார். அப்போது  அவர் பேசியதாவது, 

சில நாட்களுக்கு முன்னதாக நானும், எனது சகோதரி பிரியங்காவும் வயநாட்டிற்கு சென்று அங்குள்ள மோசமான நிலைமையை எங்கள் கண்களால் பார்த்தோம். கொள்கைகளை தள்ளி வைத்து விட்டு அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஆறுதலான விஷயம். 

வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும். பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறோம் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து