முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      உலகம்
Helicopter --

Source: provided

காத்மண்டு : நேபாளத்தில் நிகழ்ந்த  ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலியாகினர். 

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து நேற்று மதியம் 1.54 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு ரசுவா பகுதியை நோக்கி சென்றுள்ளது.  எனினும், புறப்பட்ட 3 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது.

9என்-ஏ.ஜே.டி. என்ற எண் கொண்ட ஏர் டைனஸ்டி வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஆனது, அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்ற போது, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.  

நுவகோட் மாவட்டத்தில் சிவபுரி பகுதியில் வார்டு எண் 7-ல் இருந்து பயணிகள் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  அவர்களில் 2 பேர் ஆண்கள்.  ஒருவர் பெண் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. 

விமானியும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.  மற்றொரு உடல் அடையாளம் காண முடியாதபடி விபத்தில் கருகி இருந்தது.  இதில், பயணம் செய்த 4 பேர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து