முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம்: தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் : சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : தேசியக்கொடியை ஏற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் என்று தெரிவித்த சென்னை ஐகோர்ட், தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று காலை வழக்குகளை விசாரிக்க இருந்தார். அப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு  தனது குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை இன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியிடம் முறையிட்டார். மேலும், தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தேசியக்கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து