எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சோழிங்கநல்லூர், சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.666.32 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பெருங்குடி சர்ச் சாலையில் இந்த பணியின் தொடக்க விழா நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் வரவேற்றார். அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
சென்னை மாநகர வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை ஒரே நாளில் தொடங்கி வைத்தது என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்றைக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம். தற்போது சென்னையில் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |