முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மருத்துவக்கல்வி பயில்வதற்கான 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தகவல்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      இந்தியா
Modi-2024-08-15

புதுடெல்லி, அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.,

எப்போதும் எதிர்மறை எண்ணத்துடன் செயல்பட்டு நாட்டில் நிலையற்ற தன்மை உருவாக்கும் சதியுடன் செயல்படும் சிலரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் சாதியவாதமும் சமூகத்திற்கு கேடாக உள்ளது. இத்தகைய அரசியலில் இருந்து நாம் விடுபட வேண்டும்" என்றார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு, எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடுவதாக அமைந்து இருந்தது.

முன்னதாக பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை அளிக்கிறது. அது தொடர்பாக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். அண்டை நாடுகளில் அமைதியை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் பெரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து