முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை பகிர்ந்தார் மஸ்க்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      உலகம்
Trump-Musk-2024-08-15

வாஷிங்டன், டிரம்புடன் சேர்ந்து நடனமாடும் ஏஐ வீடியோவை எக்ஸ தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் டிரம்பை நேர்காணல் செய்தார். உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.

இந்நிலையில், மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அவரும் டொனால்டு டிரம்பும் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எங்களை வெறுப்பவர்கள் இதனை ஏஐ  என்று சொல்லக்கூடும்" என்று அவர் கிண்டலடித்துள்ளார். இந்த ஏஐ வீடியோவில் 'பீ கீஸ்' என்ற கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு மஸ்க்கும் டிரம்பும் நடனம் ஆடுகின்றனர். அண்மையில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வரும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து