எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புருனே, புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று (செவ்வாய் கிழமை) புருனே சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தூதுக்குழுவினருடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் அன்பான வார்த்தைகள், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்காக உங்களுக்கும் முழு அரச குடும்பத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக உங்களுக்கும் புருனே நாட்டு மக்களுக்கும் 40வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகள் உள்ளன. நமது நட்பின் அடிப்படையே நமது பண்பாட்டு பாரம்பரியம்தான்.
நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்கிறோம். எனது வருகையும் கலந்துரையாடல்களும் எதிர்வரும் காலங்களில் எமது உறவுகளுக்கு நலம் பயக்கும் வழிகாட்டலை வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், “சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் பேச்சுக்கள் பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இந்த பேச்சுவார்த்தை உள்ளடக்கியதாக இருந்தது. வர்த்தக உறவுகள், வர்த்தக தொடர்புகள், மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்.
எனது புருனே வருகை பயனுள்ளதாக இருந்தது. இன்னும் வலுவான இந்தியா-புருனே உறவுகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. நமது நட்பு, ஒரு சிறந்த உலகிற்கு பங்களிக்கும். புருனேயின் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் விருந்தோம்பல் மற்றும் அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தனது புருனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, சிங்கப்பூர் புறப்பட்டார்.
அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் புருனே சென்ற பிரதமர் மோடியை, பட்டத்து இளவரசர் அல்-முஹ்ததீ பில்லா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். அங்குள்ள உமர் அலி சைபுதீன் மசூதிக்குச் சென்ற பிரமதர் மோடி, அதனைத் தொடர்ந்து புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Jul 2025சென்னை, நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
உள்நாட்டு பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
10 Jul 2025சென்னை, உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு முதல்வர் மு.க
-
ம.தி.மு.க.வில் நெருக்கடியா? வைகோ விளக்கம்
10 Jul 2025சென்னை, ம.தி.மு.க.வில் எந்த நெருக்கடியும் இல்லை என்று பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
-
விரைவில் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம்: கோலி, ரோகித் ரசிகர்கள் மகிழ்ச்சி
10 Jul 2025மும்பை, இலங்கையில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஒத்திவைப்பு...
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு அறிவிப்பு
10 Jul 2025வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
10 Jul 2025புதுடெல்லி, ‘பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடவடிக்கைகு ஆதார் அட்டையை ஓர் அடையாள ஆவணமாக ஏற்காதது ஏன்?’ என்று இந்திய
-
காவி உடை அணியும் நிலைக்கு மாறி விட்டார் இ.பி.எஸ். அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
10 Jul 2025அரியலூர், கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க
-
திருவாரூரில் அரசு விழா: ரூ.172.18 கோடி மதிப்பிலான 2,423 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
10 Jul 2025திருவாரூர், திருவாரூரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.172.18 கோடி மதிப்பிலான 2,423 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
-
கேரள நர்ஸ் மரண தண்டனையை தடுக்க கோரி மனு:சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணை
10 Jul 2025புதுடெல்லி, கேரள நர்ஸ் நிமிஷா பிரியா தரப்பு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
நாமக்கல்லில் 40.86 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார்
10 Jul 2025சென்னை, நாமக்கல்லில் ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
கனிம வகைகளை பெற ஆஸி.யிடம் இந்தியா பேச்சுவார்த்தை
10 Jul 2025புதுடெல்லி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து அரிய வகை கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
-
சிறையில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் திட்டம்?
10 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் காவல்நிலையங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் விசாரணையை தொடங்கியது சிறப்பு குழு
10 Jul 2025திருச்சி, கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், 11 பேரிடம் திருச்சியில் சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
முதல்முறையாக இங்கி.,க்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்று இந்திய அணி சாதனை
10 Jul 2025லண்டன், இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டி20 தொடரினை முதல்முறையாக இந்திய மகளிரணி வென்று இந்திய மகளிர் அணி சாதனைவென்ற சாதனை படைத்துள்ளது.
-
காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்
10 Jul 2025காரைக்கால், காரைக்காலில் நடந்த திருவிழாவில், பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபாடு நடத்தினர்.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை நீக்கும் பணி தொடக்கம்
10 Jul 2025சென்னை, இந்திய தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 28 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்பட்ட நபர் கைது
10 Jul 2025கோவை, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
-
அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது: ராமதாஸ்
10 Jul 2025கும்பகோணம், ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது.
-
1,996 காலியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி: போட்டித்தேர்வு நாள் அறிவிப்பு
10 Jul 2025சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள
-
வருகிற 16-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
10 Jul 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகிற 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-07-2025.
11 Jul 2025 -
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
டிரம்ப் முடிவுக்கு ஐ.நா. எச்சரிக்கை
11 Jul 2025ஜெனீவா : ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச எச்.ஐ.வி. அறிவிக்கையில், நிதி ஒதுக்கப்படாவிட்டால், எச்.ஐ.வி.