முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள திரையுலகில் தொடரும் நடவடிக்கை: நடிகர் அலன்சியர் மீது வழக்குப்பதிவு

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      சினிமா
Alancier 2024-09-04

திருவனந்தபுரம், கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்களில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளை அடுத்து தற்போது மலையாள நடிகர் அலன்சியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மலையாள நடிகர் அலன்சியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் செங்கமநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் அலன்சியர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாக மலையாள நடிகர் பாபுராஜ் மீது துணை நடிகை, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். துணை நடிகை அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், பாபுராஜ், நிவின் பாலி மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து