முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      உலகம்
Kamala-Harris--Putin-2024-9-5

மாஸ்கோ, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநா யக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இருவரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புடின்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன்தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோபைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம். 

கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.முன்பு அதிபராக இருந்த டிரம்ப், ரஷ்யாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். 

கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து