முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோ கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு : பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      இந்தியா
UP 2024-09-08

Source: provided

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரணமும் அறிவித்துள்ளார். 

ஹர்மிலாப் பில்டிங் என அழைக்கப்படும் இந்தக் கட்டிடம் மருத்துவப் பொருள்களின் வணிகத்துக்கான குடோனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழும் போது அதன் அடித்தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், லக்னோ மக்களவை உறுப்பினருமான ராஜ்நாத் சிங், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

லக்னோவில் கட்டிடம் இடிந்து விழுந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இது தொடர்பாக லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தொலைபேசியில் பேசி, தகவலை கேட்டறிந்தேன். உள்ளூர் நிர்வாகம் அங்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவி அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த கட்டிடம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நேற்று முன்தினம்  சில கட்டுமான பணிகள் நடைபெற்றது. அந்த சூழலில்தான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. காயமடைந்த மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என மாவட்ட மாஜிஸ்திரேட் சூர்யபால் கங்வார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.  லக்னோ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரணமும் அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து