முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா 'பி' அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      விளையாட்டு
india-cricket

Source: provided

பெங்களூரு : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா 'பி' அணி வெற்றி பெற்றுள்ளது. முஷீர் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பந்துவீசுவதாக... 

துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சுப்மன் கில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 181 ரன்கள் குவித்தார். இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

184 ரன்கள்... 

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி மிகவும் சுமாராக பேட்டிங் செய்து 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 36, கேஎல் ராகுல் 37 ரன்கள் எடுத்தனர். இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் ஷைனி, முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 61, சர்பராஸ் கான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அபார வெற்றி.. 

இதனையடுத்து 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா ஏ அணி 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் (57 ரன்கள்) அரைசதம் அடித்து போராடியும் பலனில்லை. இந்தியா பி தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 3 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் மற்றும் சைனி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முஷீர் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

டபிள்யூ வி ராமன் புகழாரம்

வர்ணனையின் போது டபிள்யூ வி ராமன் தெரிவிக்கையில்., "இந்த அணியில் யார் கேப்டன் என்பதில் முக்கியமில்லை. பண்ட் களத்தில் இருக்கும்போது ஒரு தலைவராக செயல்படுகிறார். ஒவ்வொரு ஓவர் இடைவெளியின் போதும் ரிஷப் பண்ட், பவுலர்களை அழைத்து சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். சைனிக்கு அவர் சில அறிவுரைகளை வழங்கினார். அது தற்போது சிறப்பாக செயல்பட்டு சைனிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்து இருக்கிறது. இதனால் பண்ட் தலைமை பண்பு சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து