முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வினேஷ் போகத் ஆவேசம்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      விளையாட்டு
Vinesh-Phogat 2024 08 08

Source: provided

தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனிடையே, பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் செய்தியாளர்களிடம் பேசுகையில், வினேஷ் போகத் இன்னொரு வீராங்கனைக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்து ஒலிம்பிக்கிற்கு சென்றதாகவும், அதற்காக கடவுள் அவரை தண்டித்துள்ளார் என்றும் கூறினார். 

இந்த நிலையில், தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற பேச்சுகளை கேட்டு வருகிறோம். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது. நான் ஒலிம்பிக்கில் வெற்றி பெறாததில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் கூறினால், அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும். அந்த பதக்கம் எனக்கு சொந்தமானது அல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமானது. தேசத்தை அவமரியாதை செய்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார். 

_________________________________________________________________________________

முதல் நாள் ஆட்டம் ரத்து

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் கிரெட்டர் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மைதானத்தின் சில பகுதிகள் ஈரமாக இருந்தது.

பலமுறை சோதனை செய்தும் போட்டியை நேற்று தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூடபோடப்படாமல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

_________________________________________________________________________________

ஆஸ்திரேலிய இணை சாம்பியன்

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடர் முடிவடைந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல்- ஜோர்டான் தாம்சன் இணை 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்- டிம் புட்ஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 

_________________________________________________________________________________

புதிய தலைவராக ரந்தீர் சிங் தேர்வு

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு பிரதிநிதிகளுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கலந்து கொண்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான 77 வயதான ரந்தீர்சிங் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த அவர் இப்போது முழுநேர தலைவராகி உள்ளார். ஓ.சி.ஏ.யின் தலைவர் பதவியை ஏற்கும் முதல் இந்தியர் ரந்தீர் தான். 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரான ரந்தீர்சிங் பஞ்சாப் மாநில பாட்டியாலாவைச் சேர்ந்தவர். ரந்தீர்சிங் ஓ.சி.ஏ. தலைவராக 2028-ம் ஆண்டு வரை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து