முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் புனித பயணத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      தமிழகம்
Internet 2023 06 30

சென்னை,  புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 23-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.   இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் வரும் 23-ம் தேதி  அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 15.01.2026 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)ஐ தொடர்பு கொள்ளலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து