முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு தேர்தலை ஏன் தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      தமிழகம்
sellur-raj 2023 06 19

Source: provided

மதுரை : கூட்டுறவு தேர்தலை ஏன் தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கூறியதாவது-

தமிழகத்தில் 33, 377 ரேஷன் கடையில் உள்ளது  கூட்டுத்துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கடந்த பத்தாண்டில் இருந்தது. இந்தியாவிலே எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் மாதம்தோறும் 20 கிலோ அரிசி என்ற திட்டத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு அம்மா தொடங்கி வைத்தார்கள் நம்மை காட்டிலும் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கூட இது போன்ற திட்டங்கள் கிடையாது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு மானியங்களாக வழங்கப்பட்டு வந்தது, அதேபோல் ரேஷன் கடைகளில் மக்களின் தேவைக்கேற்ப பணியாளர்கள் அமர்த்தபட்டனர்.மேலும் பொங்கல் பண்டிகையில் விலையில்லா வேட்டி, சேலை திட்டமும் ,பொங்கல் பரிசு திட்டமும் சிறப்பாக அம்மா ஆட்சிக்கால சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கடைகளும் சிறப்பாக வழங்கப்பட்டது  அதேபோல் மாற்றுத்திறன்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் தேசிய அளவில் கூட்டுறவு துறை விருது பெற்றது.கடந்த 10 ஆண்டுகளில் மட்டும்  28 விருதை கூட்டுத் துறை பெற்றுள்ளது இதில் இரண்டு முறை ஜனாதிபதி விருதை பெற்றது.

மக்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடியார் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் , 20 ரேஷன் கார்டு ,30 ரேஷன் கார்டு உள்ள மலை கிராமம் மற்றும் குக்கிராம பகுதிகளில் அந்தப் பகுதி மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிட 3501 நகரும் நியாயவிலை கடைகளை செயல்படுத்தப்படும் என்று அறிவித்து, 2020 ஆம் ஆண்டு எடப்பாடியார் திறந்து வைத்தார் இதற்காக 9 கோடி 66 லட்சம்  நிதியை வழங்கினார்.தற்போது நகரும் நியாய கடை உள்ளதா? இல்லை அம்மா மினி கிளிக்கை மூடியதை  போல மூடு விழா நடத்தி விட்டார்களா?. அம்மா ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் இரண்டு முறை கூட்டுறவு தேர்தல் ஜனநாயகம் முறைப்படி நடைபெற்றது, தற்போது கூட்டுறவு தேர்தலை விடியா திமுக அரசு ஏன் நடத்தவில்லை? தற்போது தனி அதிகாரிகளை வைத்து தான் நிர்வாகம் நடைபெறுகிறது.அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில்  தனியார் வங்கிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டன. தற்போது கடன்  வழங்கப்பட்டு வருகிறது அதற்காக மானியங்களை வங்கிகளுக்கு அரசு வழங்கப்படவில்லை.  ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் இந்த மூன்றாண்டுகளில் கூட்டுறவு துறை சிக்கி சீரழிந்து வருகிறது, விலையில்லா வேட்டி சேலை திட்டத்தில் கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சரியாக வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகிறார்கள், அதே போல் பொங்கல் பரிசு தொகுப்பில்  வழங்கிய புளி, மண்டவெல்லம் ஆகியவை எல்லாம் தரக்குறைவாக இருந்தது அதில் கூட 500 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.கடந்த கூட பொங்கல் பண்டிகையில் மக்களுக்கு கரும்பை கூட வழங்காமல் இரக்கமற்ற அரசாக இருந்தது அதைக் கூட எடப்பாடியார் கடுமையாக கண்டன குரல் கொடுத்த பின்பு தான் கூட்டுறவு துறை மூலம் கரும்பு வழங்கப்பட்டது.

ரேஷன் கடையில் மூலம் ஒரு கிலோ பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாமாயில் ரூ 25 க்கு வழங்கப்பட்டு வருகிறது, இதனை ஒரு கோடியே 90 லட்சம் குடும்பங்கள் வாங்கி பயன்பெற்றனர், இதே வெளிச்சந்தையில் ஒரு 1 பருப்பு 185க்கும்,பாமாயில் 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதற்காக ஆண்டுதோறும் 3,800 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்ஆகியவை வழங்கப்படவில்லை, இது குறித்து எடப்பாடியார் விரிவான கண்டன அறிக்கை வெளியிட்டு இதற்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார் ஆனாலும் விடியா அரசு இன்னும் இதை சரி செய்யவில்லை. அதேபோல் ரேஷன் கடைகளுக்கு வாடகை ,மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஆண்டுதோறும் அரசு மானியமாக வழங்கும், இந்த மானியத்தால் தான் சமாளிக்க முடியும் ஆனால் இந்த மானியங்கள் குறித்த காலத்தில் வரவில்லை இதனால் சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வருகின்றன.  

ஆண்டுதோறும் ரேஷன் கடை செலவுக்காக கூட்டுறவு துறைக்கு 450 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கும். ஆனால் கடந்த 2021-2022 ஆண்டு மானியத்தில் 3 சதவீதமும், 2022-2023 ஆண்டு மானியத்தில் 51 சதவீதமும், 2023-2024 ஆண்டில் 40 சதவீதமும் ஆக மொத்தம் 750 கோடி  நிலுவையில் உள்ளது .இதனால் ரேஷன் கடை வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளை செய்ய முடியாமல் சங்கங்கள் திணறி வருகிறது. இன்றைக்கு அரசு பணத்தில் வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலினும், அரசு பணத்தில் கார்ரேஸ் நடத்திய உதயநிதியும் தங்களின் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் இந்த கூட்டுறவு துறைக்கு உரிய நிதி வழங்க முன்வர வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக மக்கள் உங்களுக்கு 2026 தேர்தலில் பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள், மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது சீரழிந்திருக்கும் கூட்டுறவுத் துறையை மக்களுக்கு பயன்பெறும் சேவை துறையாக மாற்றுவார் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து