முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

குற்றாலம் : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த நிலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஐந்தருவியில் மிதமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவியிலும் தண்ணீர் சீராக விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். குற்றாலம் பகுதி முழுவதும் சாரல் மழை பெய்தும் குளிர்ந்த காற்று வீசியும் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து