முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Cauvery 2023 06 07

புதுடெல்லி, காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழகம் - கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு விவகாரம் பல ஆண்டுகளாக பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் தண்ணீர் கேட்பதும், கர்நாடகா மறுப்பதும் வாடிக்கையாகி கொண்டிருக்கிறது. பின்னர், டெல்லி சென்று காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றிடம் முறையிட்டு நீதி பெற வேண்டிய சூழல் உள்ளது. இவர்கள் பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை மாதந்தோறும் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தி உள்ளது. அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து