முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்தில் சிக்கிய இளம் வீரர்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியதால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா "சி" அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்திருந்த இந்தியா "ஏ" அணிக்கெதிராக சதம் விளாசினார்.

இரானி கோப்பையில் மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. இந்த தொடரில் மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருக்கிறார். இவர் இரானி கோப்பையில் விளையாடுவதற்கான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவரது கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரானி கோப்பை தொடரில் அவர் விளையாட முடியாது. மேலும், அக்டோபர் 11-ந்தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பையின் தொடக்க போட்டிகளிலும் விளையாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சுமார் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

__________________________________________________________________________________________

போட்டி அட்டவணை வெளியீடு

மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அக்டோபரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 13 டம்புல்லாவில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 20-26 ஆம் தேதி இடைவெளியில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி, இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருவது போன்ற விஷயங்கள் இலங்கை அணியின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. டி20 தொடர் விவரம் வருமாறு., முதல் டி20 - டம்புல்லா, அக்டோபர் 13, 2-வது டி20 - டம்புல்லா, அக்டோபர் 15, 3-வது டி20 - டம்புல்லா அக்டோபர் 17, ஒருநாள் தொடர் விவரம் வருமாறு., முதல் ஒருநாள் - கண்டி - அக்டோபர் 20, 2-வது ஒருநாள் - கண்டி - அக்டோபர் 23,3-வது ஒருநாள் - கண்டி - அக்டோபர் 26 .

__________________________________________________________________________________________

நியூசி., 88 ரன்களில் ஆல் அவுட்

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 306 ரன்கள் அடித்திருந்தது. இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம்நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 22 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது.  இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இலங்கையின் சுழலில் சிக்கியது. அதிலும் மிகச்சிறப்பாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யாவிடம் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 88 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து