Idhayam Matrimony

ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      உலகம்
Netanyahu-(Israeli)

Source: provided

ஜெருசலேம் : ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதிபட தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, 

இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது.

இந்த ஆட்சி உங்களை படுகுழிக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. பெரும் பாலான ஈரானியர்களுக்கு இந்த அரசாங்கம் தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்பது தெரியும். உங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் மத்திய கிழக்கு முழுவதும் வீணான போர்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை நிறுத்தி விடும். 

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தொடங்கும்.அணு ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்காக விரயமாக்கப்பட்ட பணம் அனைத்தும் உங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் உள்கட்டமைப்பு, தண்ணீர், கழிவுநீர் மற்றும் உங்களுக்குத் தேவையான மற்ற எல்லா விஷயங்களிலும் முதலீடு செய்யப்பட்டதா என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஈரான் சுதந்திரமாக இருக்கும் காலம், மக்கள் நினைக்கும் அந்த தருணம் மிக விரைவில் வரும். யூத மக்கள்-பாரசீக மக்கள் இறுதியாக சமாதானமாக இருப்பார்கள். நமது இரு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் சமாதானமாக இருக்கும்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ் புல்லாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். உங்களுடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து