முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் ரூ.400 அதிகரிப்பு: ரூ. 57 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்தது. அதன் பிறகு 2 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ 55 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 29-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.56,400-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை நேற்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்து விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.7,050-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 1000-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து