எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மில்டன் புயல் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக புளோரிடா மாகாணத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின. சரசோடா கவுண்டி அதன் அண்டைப் பகுதியில் இருக்கும் மனாடீ கவுண்ட் பகுதிகளில் தான் அதிக அளவிலான மின்தடை ஏற்பட்டுள்ளது.
புளோரிடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள புனித லூசி கவுன்டியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உயிரிழப்புகள் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹெலேன் புயலால் தாக்கப்பட்ட புளோரிடாவில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. ஹெலேன் மற்றும் மில்டன் புயல்களால் புளோரிடாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, புயல் பாதிப்புகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவின் பல பிரபலங்கள் முன்வந்துள்ளனர். டைலர் டெய்லர் ஸ்விப்ட், ஹெலேன் மற்றும் மில்டன் புயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண பணிகளுக்காக 5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


