முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      உலகம்
Ratan-Netanyahu 2024-10-13

Source: provided

ஜெருசலேம் : ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார் 

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாடாவின் இழப்பிற்காக நானும் இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். 

ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து