முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      இந்தியா
Suicide 2023 04 29

 திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கேரளா கண்ணனூர் மாவட்டத்தில் துணைக் கலெக்டராக பணியாற்றி வந்தவர் நவீன் பாபு. இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அவர் பணியில் சென்று சேருவதை முன்னிட்டு, கண்ணனூர் மாவட்டத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாமலேயே வந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா, துணை கலெக்டர் நவீன் பாபு மீது தாறுமாறான குற்றச்சாட்டுகளை கூறினார். பலர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டதால் நவீன் பாபு மனம் உடைந்து போனார். இந்நிலையில், நேற்று  நவீன் பாபு அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.  அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். 

நவீன் பாபு உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பஞ்சாயத்து தலைவர் திவ்யா பேசியதால், மனம் உடைந்த நவீன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து