முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமிமலையில் வரும் 1-ம் தேதி கந்தசஷ்டி விழா துவக்கம் : 7-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Swamimalai 2024-10-29

Source: provided

சுவாமிமலை : முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமி மலையில் வரும் 1-ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வரும் 7-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா வரும் 1-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 7-ம் தேதி காலை சுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெறும். பின்னர், அன்று மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெறும். 

இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.தொடர்ந்து, வருகிற 12-ம் தேதி யதாஸ்தானம் சேரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து