முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம் செய்ததாக 1,400 பேர் கைது

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      இந்தியா
Rail-box 2024-11-02

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபரில் கிழக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரெயில்களின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த ஆண் பயணிகள் 1,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன என மண்டல அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இவர்களில் 262 பயணிகள் ஹவுரா டிவிசனை சேர்ந்தவர்கள் ஆவர். 547 பேர் சீல்டா, 176 பேர் மால்டா மற்றும் 392 பேர் அசன்சோல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். கைது செய்யப்படும் நபருக்கு எதிராக அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.

பெண்கள் மட்டுமே பயணம் செய்ய கூடிய பெட்டியில் அல்லது பெண்களுக்கான சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என அந்த அதிகாரி கூறியுள்ளார். ஏதேனும் வசதி குறைவு ஏற்பட்டால், 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ரெயில்வே அதிகாரிகளிடம் பெண்கள் உதவி கோரலாம் என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து