எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், காயம் காரணமாக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோகோவிச் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால், காயம் காரணமாக தற்போது என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. என்னை அந்தப் போட்டியில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்கும் இதர வீரர்களுக்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.
_____________________________________________________________________________________
ஆஸி., அணிக்கு புதிய கேப்டன்
கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணியை கேப்டன் பெயரில்லாமல் அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக மிட்செல் மார்ஷ் டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில், 29 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஷ் இங்லிஷ் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20க்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்லிஷ் கேப்டனாக செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. பார்டர்- கவாஸ்கர் கோப்பை தயாரிப்புக்காக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் 3ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடட்டார்கள் என்பதால் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் மார்ஷ், டிராவிஷ் ஹெட் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட இருப்பதால் டி20 கேப்டனாக இந்தத் தொடருக்கு மட்டும் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் 14ஆவது டி20 கேப்டனாகவும் 30ஆவது ஒருநாள் கேப்டனாகவும் இங்லிஷ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் தேசிய அணித் தலைவர் ஜார்ஜ் பெய்லி, “ஜோஷ் இங்லிஷ் ஒருநாள், டி20 அணியில் விளையாடுபவர். களத்திலும் களத்துக்கு வெளியேவும் மிகவும் மதிக்கத்தக்க வீரராக இருக்கிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஷார்ட், ஜாம்பா, மேக்ஸ்வெல், ஸ்டாயினிஸிடமிருந்து இவருக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது. மூத்த வீரர்களுக்கு பதிலாக 3ஆவது ஒருநாள் போட்டியில் சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், ஜோஷ் பிலிப் அணியில் இணைந்துள்ளார்கள்” எனக் கூறினார். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல் டி20 தொடர் நவ.14ஆம் தேதி தொடங்குகிறது.
_____________________________________________________________________________________
ஏலம்: பென் ஸ்டோக்ஸ் விலகல்
ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும். அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
இந்நிலையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார் . ஏலத்தில் 1,574 வீரர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2023-ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்ற புதிய விதி உள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாட முடியாது.
_____________________________________________________________________________________
ஐ.பி.எல். ஏலத்தில் ஆண்டர்சன்
ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ. 1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டியில் கடைசியாக 2014ம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
_____________________________________________________________________________________
ரோகித் சர்மா குறித்து ஸ்ரீகாந்த்
ரோகித் சர்மாவின் கேப்டன்சி எதிர்மறையாக, தற்காப்பு உத்தியுடன் இருக்கிறது, அட்டாக்கிங் ஆக இல்லை என்ற விமர்சனங்களை வர்ணனையில் ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கவாஸ்கர் உள்ளிட்டோர் வைத்தனர். பேட்டிங்கில் ‘லேசி எலிகன்ஸ்’ என்று கூறப்படும் ரோகித் சர்மா அலட்சியமாக ஆட்டமிழந்து இந்திய அணியை 3-0 என்ற முற்றொழிப்பு தோல்விக்கு இட்டுச் சென்றது ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவேசங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும்போது, “முன்னோக்கிச் சிந்திக்க வேண்டும். ரோகித் சர்மா நன்றாக ஆடவில்லை எனில் அவர் ஓய்வு பெறுவது நல்லது. அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடுவார்.
ரோகித் சர்மாவுக்கு வயதாகி வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் தான் தொடர் முழுதும் மோசமாக ஆடியதாகவும் மோசமாக கேப்டன்சி செய்ததாகவும் ரோகித் சர்மாவே ஒப்புக்கொண்டதற்காக அவருக்கு ஹேட்ஸ்-ஆஃப். இப்படி ஒப்புக்கொள்ளுதல்தான் ஒரு வீரர் தன்னுடைய ரிதமுக்குத் திரும்புவதன் முதல் படி. நம் தவறுகளை ஒப்புக் கொள்வது முக்கியமானது. மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு குணம் ஆகும் அது. ரோகித் சர்மா வெளிப்படையாக தன் குறைகளை ஒப்புக் கொண்டுள்ளார். இது அவர் தன்னை மீட்டெடுப்பதற்கான பாதையில் செல்லப் போகிறார் என்று அர்த்தம். இது என்னுடைய கருத்து.” இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
குஜராத்தில் நிலநடுக்கம்
26 Dec 2025காந்தி நகர், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் வெள்ளிக்கிழமை(டிச.26) அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.


