முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி கவர்னர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்த கிருஷ்ணசாமி

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
Krishnasamy

சென்னை, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கவர்னர் ரவியை சந்தித்து மனு அளித்தார். 

 பட்டியலினத்தவருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதால், தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதி திராவிடர் சமூக மக்கள், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். 

மேலும், அறிவித்தபடி, சென்னையில்  அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். 

கொட்டும் மழையிலும் கவர்னர் மாளிகையை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, அனுமதியின்றி பேரணி நடத்தியதாக, கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் ஷியாம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என். ரவியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து