முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      உலகம்
Pak 2024-11-09

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.  46 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று காலை நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நகரத்தின் ஆணையர் ஹம்சா ஷப்கத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்துமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்து தெரிவித்த குவெட்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் முகமது பலோச், சம்பவம் நிகழ்ந்த போது அந்த இடத்தில் சுமார் 100 பேர் இருந்தனர். குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு ஜப்பார் எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்த போது பிளாட்பார்மில் இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. ரயில் நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கோல்பூர் - மாச் இடையேயான ரயில் பாதையில் ரயில்வே பாலம் ஒன்று இதே அமைப்பால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்பராஸ் புக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மனிதர்கள் என கூறுவதற்கான தகுதியை இழந்தவர்கள் பயங்கரவாதிகள் என்றும் மிருகங்களை விட கீழானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பலுசிஸ்தானில் பயங்கரவாதம் வேரோடு பிடுங்கி எரியப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த சி.சி.டி.வி. கேமரா வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், குவெட்டா ரயில் நிலையத்தில் நடைமேடையில் மக்கள் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். 

அப்போது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ பிழம்பு ஏற்பட்டு மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து