முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெலன்ஸ்கியுடன், எலான் மஸ்க்கை தொலைபேசியில் பேச வைத்த டிரம்ப்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      உலகம்
Trump 2024-11-09

Source: provided

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது. 

டிரம்ப் - ஜெலன்ஸ்கி உரையாடலில் எலான் மஸ்க்கும் இடம்பெற்றார் என்பதை உக்ரைன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கை எனது தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பில் அமர வைப்பேன் என்று டிரம்ப் எற்கெனவே கூறியிருந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான உரையாடலின் போது, எலான் மஸ்க்கையும் டிரம்ப் பேச வைத்திருக்கிறார். இது புதிய அரசில் எலான் மஸ்க் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுவார் என்பதை உணர்த்துகிறது.

முன்னதாக, அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் அரசியல் குறித்து சில  கருத்துகளை எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இது குறித்து எலான் மஸ்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது. அடுத்து நடைபெறவுள்ள கனடா நாட்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பின்னர் அவர் காணாமல் போய்விடுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜெலன்ஸ்கியுடனான டிரம்பின் உரையாடலில் இடம்பெற்று இன்னொரு அதிர்வலையை எலான் மஸ்க் ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து  உக்ரைன் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

ஜெலன்ஸ்கி - டிரம்ப் தொலைபேசி உரையாடலின்போது எலான் மஸ்க்கும் பேசியது உண்மை. டிரம்ப் பேசி விட்டு தொலைபேசியை மஸ்க்கிடம் கொடுத்தார். உக்ரைனுக்கு ஸ்டார்லிங் சேவைகளை வழங்கியமைக்காக ஜெலன்ஸ்கி அவருக்கு நன்றி தெரிவித்தார். 

ஆனால் முக்கியமான பேச்சுவார்த்தை டிரம்ப்புடன் தான் நடந்தது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையின்போது போர் தொடர்பான விவகாரங்கள் ஏதும் விவாதிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை இருந்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து