முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஜெய்சங்கருடன் சவுதி வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Jaishankar 2024-11-13

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சவுதி வெளியுறவு துறை அமைச்சர் சந்தித்து பேசினார். 

சவுதிஅரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று காலை டெல்லியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சவுதிஅரேபியாவின் வெளியுறவு அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற இந்தியா-சவுதிஅரேபியா மூலோபாய கூட்டமைப்பு கவுன்சிலின் 2-வது அரசியல், சமூகம், பாதுகாப்பு மற்றும் கலாசார ஆலோசனைக் கூட்டத்தில் இருநாட்டு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-சவுதி அரேபியா இடையிலான இருதரப்பு உறவு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 26 லட்சம் இந்திய குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதில் சவுதி அரேபியா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். 

மேலும் கூட்டு ராணுவ பயிற்சிகள் மூலம் இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலிமையடைந்து இருப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அதோடு, சவுதி அரேபியாவின் விஷன் - 2030 மற்றும் இந்தியாவின் விக்சித் பாரத் - 2047 ஆகிய இலக்குகளை அடைவதற்கு இரு நாட்டு தொழில் நிறுவனங்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து