முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பழமை வாய்ந்த ராமர் சிலை சீரமைப்பு

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருப்பதி : திருப்பதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலை ஆகம முறைப்படி சீரமைக்கப்பட்டுள்ளது. 

திருமலை திருப்பதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலைகளில் இருக்கும் சேதங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி அடுத்த சீரமைப்பு பணி 2030-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும். 

இந்த சூழலில், அங்குள்ள ராமர் சிலையின் விரலில் சிறிய சேதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ராமர் சிலை ஒரு மலை உச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தேவஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது. 

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உற்சவத்தின் போது ராமர் சிலையில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை உடனடியாக சீரமைக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருப்பதியில் சிலைகளின் சீரமைப்பு பணி இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகே மேற்கொள்ளப்படும். இதனிடையே ராமர் சிலையில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலை சமீபத்தில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ஜீயர்கள், ஆகம ஆலோசகர்கள், பூசாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேவஸ்தான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

இதன் அடிப்படையில் ராமர் சிலையை ஆகம முறைப்படி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து