முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் 3-ம் தேதி அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

 

சென்னை: குடிநீர், சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் வரும் 3-ம் தேதி அ.தி.மு.. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

 தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணம் உயர்வு, குப்பை வரி விதித்தல் என்று பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியதைக் கண்டித்து அ.தி.மு.க.வின் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

திருப்பூர் மாநகராட்சியின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வருகிற 3-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை, திருப்பூர் மாநகராட்சி மாமன்ற  குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி  தலைமையில், .தி.மு..வை சேர்ந்த 17 மாமன்ற உறுப்பினர்களும்,  கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை,  கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைப்பார்.

கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி பழச்சாறு வழங்கி முடித்து வைப்பார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து