முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுக்கும் போர்: ராணுவத்தில் இருந்து வெளியேறும் உக்ரைன் படை வீரர்கள்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      உலகம்
Ukraine 2024-11-30

Source: provided

 

கீவ்: ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறுவதால் மனிதவள பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா -உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இது நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் வீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறுவதால் மனிதவள பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, பலஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சோர்வுற்ற நிலையில் போர் மற்றும் முன்வரிசை நிலைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

சில வீரர்கள் மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு சென்று திரும்பி வரவே இல்லை என கூறப்படுகின்றது. போரின் பேரதிர்ச்சிகளால் வேட்டையாடப்பட்டு, வெற்றிக்கான வாய்ப்பின்றி இருண்டுள்ளதால் வீரர்கள் மனசோர்வடைந்துள்ளனர்.

படைகளில் எஞ்சி இருக்கும் வீரர்கள் கமாண்டர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது கட்டளைகளை ஏற்க மறுக்கிறார்கள். இந்த பிரச்னை மிகவும் முக்கியமானதாகும் என்று ராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போரின் மூன்றாவது ஆண்டு என்பதால் ராணுவத்தை விட்டு வெளியேறும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இது உக்ரைனுக்கு மிகப்பெரிய தலைவலி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து