முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      இந்தியா
Maharastra 2024-11-30

Source: provided

 

மும்பை:மகராஷ்டிராவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.

மகராஷ்டிர மாநிலம் பாந்த்ராவிலிருந்து கோண்டியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பிந்த்ரவன தோலா கிராமத்துக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்து கோண்டியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,  மகராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இதனிடையே, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க போக்குவரத்து நிர்வாகத்துக்கு மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து