முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - சீனா உறவு மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      இந்தியா
Jaishaker 2024-12-03

Source: provided

 

புது டெல்லி:  2020-ம் ஆண்டுக்கு பிறகு, சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது என லோக்சபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா- சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் நிலவிவந்தது. தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வந்த நிலையில், சுமூக முடிவு ஏற்பட்டு வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர். 

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்  விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது.தூதரக ரீதியில் நடந்து வந்த தொடர் பேச்சுவார்த்தை காரணமாக, நமது உறவில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எல்லைப் பிரச்னைக்கு நேர்மையான, சுமூகமான மற்றும் இரு தரப்பும் சுமூகமாக ஏற்றுக் கொள்ளும் முடிவை எடுப்பதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது. 

எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்ட காலத்தில், கடினமான சூழ்நிலையிலும், கொரோனா  சவாலுக்கு மத்தியிலும் இந்திய ஆயுதப்படையினர் உடனடியாகவும், விரைவாகவும் பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து