முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறு: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
PSLV 2024-12-03

Source: provided

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் மாலை 3.08 மணிக்கு தொடங்கிய நிலையில் தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

 இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை 4.12 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைகோளில் ஏற்பட்ட கோளாறை செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து