முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்தியது சிங்கப்பூர் அரசு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      உலகம்
Singapore 2024-12-04

Source: provided

சிங்கப்பூர் சிட்டி: பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 64 ஆகவும், மறு பணியமர்த்தப்படும் வயதுக்கான உச்சவரம்பு 69 ஆகவும் அதிகரித்து சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். 

குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள், திருமண வயது தள்ளிப்போவது, திருமணம் செய்து கொள்ளாதது போன்ற காரணங்களால், இங்கு இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 

இதனால் உடல் உழைப்புக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சூழலில், பணியாளர்கள் சட்டபூர்வமாக ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசு அறிவித்துள்ளது. தற்போது ஓய்வு பெறும் வயது 63 ஆகவும், மீண்டும் பணியமர்த்தப்படும் வயது 68 ஆகவும் உள்ளது. புதிய விதிகளின் படி, ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்த்தப்படுகிறது. 

மீண்டும் பணியமர்த்தப்படுவோருக்கான வயது உச்சவரம்பு 69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 69 வயது வரை அவர்கள் பணியாற்ற முடியும். இந்த உத்தரவு வரும் 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. 

அதே போல், 2030-ம் ஆண்டு ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், மறு பணி அமர்வு செய்யப்படுவோருக்கான வயது உச்சவரம்பு 70 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தாலும், பொருளாதார நலன் கருதி பலரும் தொடர்ந்து வேலை செய்யவே விரும்புகின்றனர். அவர்களுக்கு வேலை அளிப்பதன் மூலம், பொருளாதாரம் மேம்படும்.

அவர்களது பணி அனுபவம் நிறுவனங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என அரசு கருதுகிறது. அரசின் திட்டப்படி, வயதானவர்களை அவர்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசு மானிய நிதியுதவி வழங்கப்படும்.  

அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பகுதி நேர வேலைக்கு முதியவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். வயதானவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 78,75,785 மானியம் வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து