முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசா தலைவராக ஈசாக்மேன் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      உலகம்
Isaacman-2024-12-05

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார். 

அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். 

இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார்.  அவற்றில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் உலக பணக்காரரான எலான் மஸ்க்கும் இடம் பெற்றுள்ளார்.

இதன்படி பாதுகாப்பு, வீட்டு வசதி, விவசாயம், தொழிலாளர் துறை, தேசிய சுகாதார மைய இயக்குநர் மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு டிரம்ப், நபர்களை நியமனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (நாசா அமைப்பு) அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட  டிரம்ப் நியமித்து உள்ளார்.  

ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அவர் கோடீசுவரராவார். இது பற்றி டிரம்ப் கூறும் போது, 

ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

நாசா அமைப்பின் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதல், விண்வெளி அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளுக்கான வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கற்று கொள்வது ஆகியவற்றை ஜாரெட் வழி நடத்தி செல்வார் என கூறியுள்ளார்.  

ஜாரெட் அவருடைய மனைவி மோனிகா மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மிலா மற்றும் லிவ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த நியமன அறிவிப்புக்கு ஈசாக்மேன் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.  மனித வரலாற்றில் மிக சிறந்த சாதனை படைப்பதில் முன்னணியில் திகழும் நாடாக அமெரிக்காவை வழி நடத்துவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.  

டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான எலான் மஸ்க்குடன் விரிவான நிதி சார்ந்த தொடர்பை ஈசாக்மேன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து