முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்கடையூர் கோவிலில் நடந்த புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Thirukadaiyur-Temple-2024-1

சென்னை, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மாள் உடனாகிய அமிர்தகடேசுவர சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதீன பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

 நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், திருக்கடையூர் அமிர்தகடேசுவர சுவாமி கோவிலின் புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரசு பொறுப்பேற்ற பின் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்கள் மற்றும் ரூ. 29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதில் ரூ. 8 கோடி செலவில் பெரியபாளையம், பவானியம்மன் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் மற்றும் ரூ. 4 கோடி செலவில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் பணிகள் நிறைவுற்று பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திடும் வகையில் உலா வருகிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து