எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை கவர்ந்த நகரங்கள் தொடர்பாக ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்படுகிறது.
பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், பாரிஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. மேட்ரிட் 2-வது இடத்திலும், டோக்கியோ 3-வது இடத்திலும், ரோம் 4-வது இடத்திலும், மிலன் 5-வது இடத்திலும் உள்ளன.
நியூயார்க் (6), ஆம்ஸ்டர்டாம்(7), சிட்னி(8), சிங்கப்பூர்(9), பார்சிலோனா(10) ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் தலைநகர் டெல்லி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் கெய்ரோ உள்ளது. ஜுஹாய் (சீனா) 99-வது இடத்திலும், ஜெருசலேம் 98-வது இடத்திலும் உள்ளது.
கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தியது மற்றும் சுற்றுலா சலுகைகளை வழங்கியதால் மக்களை கவர்ந்த நகரங்களில் பாரிஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அதிகமாக பயணிகள் வரக்கூடிய நகரங்களைப் பொருத்தவரை, இந்த ஆண்டில் 32 மில்லியன் சர்வதேச வருகையுடன் பாங்காக் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இஸ்தான்புல் (23 மில்லியன்), லண்டன் (21.7 மில்லியன்), ஹாங்காங் (20.5 மில்லியன்), மற்றும் மெக்கா (19.3 மில்லியன்) ஆகிய நகரங்கள் டாப்-5 நாடுகளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அன்டால்யா 6-வது இடத்திலும், துபாய் 7-வது இடத்திலும், மெக்கா 8-வது இடத்திலும், பாரிஸ் 9-வது இடத்திலும், கோலாலம்பூர் 10-வது இடத்திலும் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


