முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகனின் பெயரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தெ. பரிந்துரையின்பேரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகனை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நீதிபதி மன்மோகன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி மன்மோகன் மார்ச் 2008ல் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் அதன் தலைமை நீதிபதியாக கடந்த செப்டம்பர் 29 முதல் செயல்பட்டு வந்தார். இவர் நேற்று டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியில் இருந்து விடைபெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து