முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை: பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை  அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி  உள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதும், குடிநீர் விநியோகத்தை கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் தேவைக்கேற்ப அதிகரிப்பதும் மாநில அரசின் தலையாய கடமைகளாகும். 

இந்தப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இந்தப் பணிகளை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது. 

சென்னை, பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகருக்கு பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டதாகவும், இந்தக் குடிநீரில், கழிவுநீர் கலந்து நிறம் மாறி இருந்ததாகவும், இதனை அருந்திய அப்பகுதி மக்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த  அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து