முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் நிறைபடி காணிக்கையாக நாணயங்களை வழங்க பக்தர்களுக்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Sabarmala

Source: provided

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் நாணயங்களையும் நிறைபடி காணிக்கையாக பக்தர்கள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினந்தோறும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேரடி பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் ஆன்லைன் பதிவுதாரர்களில் தினமும் 15 ஆயிரம் பேர் வருவதில்லை. இதனால் நேரடியாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. 

தற்போது மழை குறைந்துள்ளதால் புல்மேடு, முக்குழி உள்ளிட்ட வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம். 

இதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகைபுரத்தம்மன் கோவிலில் மரக்கால் போன்ற பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நெல், அரிசி, சர்க்கரை, மஞ்சள், பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதில் நிரப்பி காணிக்கையாக தருகின்றனர். 

மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இது போன்ற காணிக்கையை அளித்துள்ளனர். இனி மேல் சபரிமலை சன்னிதானத்தில் நாணயங்களையும் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 

செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் பலரும் நெல், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கலனில் நிறைத்து காணிக்கையாக தருகின்றனர். சபரிமலை சன்னிதானத்தை பொறுத்தவரையில் நெல் மட்டுமின்றி நாணயங்களையும் இனிமேல் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம். 

மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம். இதற்காக காலை 3.30 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் மாளிகைபுரத்தில் காலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இந்த காணிக்கையை வழங்கலாம் என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து