முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 நாட்களுக்கு பின் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      தமிழகம்
Boat 2024-12-14

Source: provided

மண்டபம்: ராமேசுவரம் மீனவர்கள் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.

தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இதனால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தடை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து சென்றதால் 7 நாட்களுக்கு பின் கடல் காற்று குறைந்து இயல்பு நிலைக்கு மாறியது. நேற்று முன்தினம் சூறாவளி காற்றின் வேகம் தணிந்ததால் நேற்று பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க மீன்துறை அனுமதி அளித்தது.

அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் நேற்று அதிகாலை காலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். 7 நாட்களுக்கு பின்பு கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து