முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் சுமித் கேப்டன்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      விளையாட்டு
9-Ram-52

Source: provided

சிட்னி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 29-ம் தேதியும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 6-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான கேப்டன் கம்மின்சுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டீவ் சுமித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம் கான்ஸ்டாஸ்...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட சாம் கான்ஸ்டாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் இடம்பெற்றுள்ள போதிலும், அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜியார்ஜ் பெய்லி...

இலங்கைக்கு எதிரான தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அந்தத் தொடரில் சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் எனவும், இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் விளையாடியதால் டிராவிஸ் ஹெட் அந்த இடத்தில் களமிறங்க வாய்ப்பில்லை எனக் கூற முடியாது எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

நன்றாக ஆடினார்...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக விளையாடவுள்ளவர் எப்படி விளையாடுவார் என்பது அவர் விளையாடிய பிறகே தெரியும். சாம் கான்ஸ்டாஸ் வேகமாக கற்றுக்கொள்பவர். அவர் ஆடுகளங்கள் குறித்த தகவல்களை வேகமாக உள்வாங்கிக் கொள்வார். அவர் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடியுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் அவர் விளையாடியுள்ளார். அதனால், அவரால் இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நன்றாக விளையாட முடியும்.

துவக்க ஆட்டக்காரர்...

சாம் கான்ஸ்டாஸின் யுக்திகள் அவருக்கு உதவியாக இருக்கும். அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கு பொருத்தமானவராக இருப்பார். அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் திறன் கொண்ட டிராவிஸ் ஹெட்டும் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க நிறைய தெரிவுகள் இருக்கின்றன என்றார். இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடிய சாம் கான்ஸ்டாஸ், 113 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஸ்டீவ் சுமித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், நாதன் மெக்ஸ்வீனி, பியூ வெப்ஸ்டர், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், கூப்பர் கனோலி, டாட் மர்பி, மாட் குஹ்னேமன், சீன் அபோட், ஸ்காட் போலன்ட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து