எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: தம்மை ஒரு இந்தியன் என எண்ணுபவர்களும், சனாதனம் மீது மரியாதை கொண்டவர்களும் கும்பமேளாவுக்கு வரலாம்
என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இந்த முறை ஜனவரி 13-ல் மகா கும்பமேளா துவங்குகிறது. இந்த மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் எவரும் கடைகளை நடத்தக் கூடாது என துறவிகளின் சபைகளான அகாடாக்கள் வலியுறுத்தின. இந்தச் சூழலில், மகா கும்பமேளாவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்தப் பின்னணியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது கும்பமேளா திடலில் முஸ்லிம்களின் அனுமதி குறித்த கேள்வி முதல்வரிடம் எழுப்பப்பட்டது. இதற்கு விரிவான பதிலை முதல்வர் யோகி அளித்துள்ளார்.
துறவியும், கோரக்நாத் மடத்தின் தலைவருமான முதல்வர் யோகி கூறும்போது, ‘தம்மை ஒரு இந்தியன் என எண்ணுபவர்களும், சனாதனம் மீது மரியாதை கொண்டவர்களும் கும்பமேளாவுக்கு வரலாம். சிலரது மூதாதையர்கள் தம் கடவுளை வணங்க, கட்டாயத்தின் பேரில் தமது மதமாக இஸ்லாத்தை ஏற்றனர். எனினும், அவர்களும் இந்தியக் கலாச்சாரத்தின் மீது பெருமை கொண்டவர்களாக உள்ளனர்.
மேலும், அவர்கள் தங்கள் கோத்திரத்தை இந்தியாவின் முனிவர்களின் பெயருடன் தொடர்புபடுத்துகிறார்கள். இதேநிலையில் அவர்கள் இந்திய பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்கின்றனர். இதுபோன்றவர்கள் தங்கள் கலாச்சாரத்தின்படி கும்பமேளாவின் சங்கமத்தில் புனித நீராடல் செய்ய விரும்பி வந்தால் பிரச்சினை இல்லை. இதற்காக வருபவர்கள் வரவேற்கப்படுவார்கள். ஆனால், சிலர் இந்த கும்பமேளா நிலம் தம்முடையது போன்ற சிந்தனைகளில் வந்தால் அவர்களது ஒடுக்குமுறைகளை எடுத்து புதிய வர்ணம் பூசுவது அவசியமாகிறது.’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் பரேலி மவுலானாவான முப்தி ஷ்காபுத்தீன் ரிஜ்வி கூறியக் கருத்து பெரும் சர்ச்சையானது. அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவரான இவர், பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறும் இடம் மாநிலத்தின் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மவுலானாவின் இந்தக் கருத்திற்கு பல முஸ்லிம் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையேதான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தனது பதிலில் தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மவுலானவின் கருத்து குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ‘கும்பமேளா நிலத்தை தங்களுடையது எனத் தவறாகக் கூறுவது வக்பு வாரியமா அல்லது நில மாபியாவா? இந்த உண்மையை கண்டறிய நாம் 1363 ஆம் ஆண்டு முதலான ஆவணங்களைப் பார்க்க வேண்டி உள்ளது. அதில் இந்த நிலம் யாருடையதாக இருந்தது என்பதை கண்டறிந்து ஆராய்ந்தபின் அவருக்கு பதிலளிக்கிறேன். ’எனக் கூறியிருந்தார். ஜனவரி 13ம் தேதி துவங்கும் மகா கும்பமேளாவுக்கு நாற்பது கோடிக்கும் அதிகமானோர் வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


